சிவாஜி கணேசன் நினைவு தினம்: காஞ்சிபுரத்தில் அனுசரிப்பு
காஞ்சிபுரத்தில் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் 24 ஆவது நினைவு தினத்தையொட்டி மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் காந்தி சாலை காமராஜர் சிலை அருகே காஞ்சிபுரம் மாவட்ட நகர சிவாஜி மன்றம் மற்றும் காஞ்சிபுரம் ஹேண்ட்லூம் சிட்டி அரிமா சங்கம் இணைந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 24 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் அன்னாரது திருஉருவப்படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்தப்பட்டு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

லைன் தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திருவேங்கடம் முன்னிலை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் பாக்யராஜ், செயலாளர் நாராயணமூர்த்தி, ராஜா, சரஸ்வதி, பானு, அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் ராதாகிருஷ்ணன் நன்றிகளை தெரிவித்தார்.


