காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் காந்தி சாலை காமராஜர் சிலை அருகே மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாச ராகவன் தலைமையில் அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜி வி மதியழகன் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் கலந்துகொண்டு அன்னாரது திருவருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநகரத் தலைவர் நாதன் முன்னிலை வகித்தார் இதனை தொடர்ந்து மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன் தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்டத் துணைத் தலைவர் தாரன், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் பூக்கடை மணிகண்டன், மாநில வர்த்தக காங்கிரஸ் நிர்வாகி சங்கரலிங்கம், மாநில எஸ்சி எஸ்டி பிரிவு பொதுச்செயலாளர் கன்னியப்பன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் டிபி சீனிவாசன், பூந்தோட்டம் பழனி, சுமங்கலி சீனிவாசன், மாநகர பகுதி தலைவர் பட்டு காமராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் கதிரவன், வட்டதலைவர் மோதிலால், ஓபிசி அணி பாலமுருகன், ஆறுமுகம், வட்டாரத் தலைவர் யூதா முருகன் கந்தசாமி, இளைஞரணி யோகி, வையாவூர் லோகு, தென்னேரி சுகுமார், லோகநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பொது மக்களுக்கும் சாலையோர வியாபாரிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


