காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் ஸ்ரீகருக்கிலில் அமர்ந்தவள் ஆலயத்தில் புரட்டாசி பவுர்ணமி வெற்றி சிறப்பு பூஜைகள்
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கருக்கினில் அமர்ந்தவள் ஆலயத்தில் புரட்டாசி பவுர்ணமி வெற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் புதுப்பாளையத்தெருவில் தென்கோடியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ கருக்கலில் அமர்ந்து உள்ள ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமி ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வண்ணமலர் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தேவகி வெட்டிங் கன்வென்ஷன் திருமண மஹால் உரிமையாளர் சரவணன் இளவரசி குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர்.

