காஞ்சிபுரம் ஸ்ரீபழனி ஆண்டவர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா
காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலயத்தில் 16ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்ரமணியசுவாமி ஆலயம் எதிரே நிமந்தக்கார தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு பழனி ஆண்டவர் ஆலயத்தில் 16 ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதில் இரண்டாம் நாள் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விழாவை ஒட்டி அப்பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழா உபயத்தினை ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் சிவ வேலியப்பன் எம் ஆர் கணேஷ், எல் சுரேஷ் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை நிமித்தாரத்தெரு, நிம்மதக்கார ஒத்தவாடை தெரு, கற்பக பிள்ளையார் கோவில் தெரு, இரட்டைப் பிள்ளையார் கோவில் தெரு, கனகசுப்புராயர் தெரு ஆகிய ஐந்து தெருவாசிகள் மற்றும் இளைஞர் அணி இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

