காஞ்சிபுரம் ஸ்ரீவித்யா விநாயகருக்கு 20 ஆம் ஆண்டு சதுர்த்தி

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வித்யா விநாயகருக்கு 20 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயம் அருகே அமைந்துள்ள சுப்பராய முதலியார் தெரு மற்றும் மாநாடு தர்மராஜர் தெருவாசிகள் இணைத்து ஸ்ரீ வித்யா விநாயகருக்கு 20 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் விநாயகர் பெருமான் பிரம்மாண்டமாக காட்சியளித்தார். இவருக்கு சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நமது பாரம்பரிய வாய்ப்பாட்டு, வீணை கச்சேரி, யோகா பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை சுப்ராய முதலியார் தெரு மற்றும் மாநாடு தர்மராஜர் தெருவாசிகள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.