காஞ்சிபுரத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
காஞ்சிபுரத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதில் ரத்த அழுத்தம் ரத்தத்தில் சர்க்கரையில் அளவு பொது மருத்துவம் கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றுகள் வழங்கினார்கள்.
இதில் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி பொறியாளர்கள், ஆய்வாளர் சீனிவாசன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், ஷர்மிளா, பகுதி செயலாளர் தசரதன், சந்துரு, திலகர், வெங்கடேசன் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



