காஞ்சிபுரம் தாய் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் நவராத்திரி உற்சவம்
காஞ்சிபுரம் தாய் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் 47 ஆம் ஆண்டு நவராத்திரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் ஆலயங்களில் நவராத்திரி உற்சவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தாய் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் 47 ஆம் ஆண்டு நவராத்திரி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு மயில் தோகையால் முருகப்பெருமான் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா கலை நண்பனின் எம் ஜி வடிவேல் மற்றும் மாஸ்டர் கிருஷ்ணா சகோதரர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
இதே போல் பூவரசன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள அன்னூர் ரேணுகாம்பாள் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை நடப்பட்டது. விழாவை ஒட்டி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விடாயப்படுகொலை ஆலய விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

