காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் திருமுறை திருவிழா

காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் திருமுறை திருவிழா கோலாகலமான துவக்கம்.
காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் திருமுறை திருவிழா கோலாகலமான துவக்க விழா நடைபெற்றது.
இதில் இன்ஃபா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அருணாச்சலம் முதலியார் தலைமை தாங்கி சிறப்பாக துவக்கி வைத்தார்.
இதில் குத்து விளக்கு ஏற்றி கோலாகலமாக துவக்கப்பட்டது.

இதில் துணைத் தலைவர் டாக்டர் செல்வம் பொதுச் செயலாளர் முத்துசாமி, ஒருங்கிணைப்பு செயலாளர் முருகேஷ், காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் அப்பு என்கின்ற வள்ளிநாயகம், பிஜேபி மாநில ஓபிசி அணி துணைத் தலைவர் செந்தில் முதலியார், பிஜேபி மாவட்ட தலைவர் ஜெகதீசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், கோபிநாத், பச்சையப்பாஸ் நிறுவன உரிமையாளர்கள் பிரபு, எழிலன் மோதிலால் உள்ளிட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவினை கோலாகலமாக துவக்கினர்.

இதனைத் தொடர்ந்து சிவ தாமோதர ஐயா அவர்களின் திருமுறை விண்ணப்பப் பெருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

