காஞ்சிபுரம் தெற்கு திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம் தெற்கு திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பாக கழக இளைஞரணி செயலாளரும் இளம் தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட அமைப்பாளர் E. L.கண்ணன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகர கழக செயலாளர் திரு.சி.கே.வி தமிழ்ச்செல்வன் அவர்கள் மாவட்ட வழக்கறிஞர் அணியின் மாவட்ட தலைவர் திரு. ஆர்.கே. தம்பிதுரை அவர்கள் மாநகர அமைப்பாளர் திரு.கே.பி.சிவகுமார் அவர்கள் மற்றும் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள், துரைமுருகன், அர்ஜுன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அரவிந்த் குமார் அவர்கள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



