கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் அருள்மிகு முத்தீஸ்வரர் திருக்கோவிலில் சொக்கப்பனை ஏற்றும் உற்சவம்
கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் அருள்மிகு முத்தீஸ்வரர் திருக்கோவிலில் சொக்கப்பனை ஏற்றும் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் சிவ காஞ்சி பகுதியில் திருமால் ஆமை வடிவில் வந்து சிவபெருமானை வழிபட்ட திருத்தலமாக விளங்கும் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமானுக்கு உகந்த கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சுந்தராம்பிகை அம்மனுக்கும் கச்சபேஸ்வரர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவில் கோபுரத்தில் கார்த்திகை தீப விளக்கு ஏற்றி வைத்து, கொடிமரத்து அருகே பச்சை பனை ஓலைகள் குவியல் போல கட்டி சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளம் முழங்க சொக்கப்பனை ஏற்றி வைக்கும் உற்சவம் நடைபெற்றது.
சொக்கப்பனை ஏற்றும் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவாச்சாரியார்கள் சொக்கப்பனையை ஏற்றி வைத்த போது அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டு வணங்கி வழிபட்டனர்.
கார்த்திகை தீப சொக்கப்பனை மற்றும் உற்சவத்தில் திரளான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
இதேபோல் காந்தி சாலையில் உள்ள அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீப விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆலய அறங்காவலர் குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆலய கோபுரத்தின் முன்பு சொங்கப்பா சொக்கப்பனை ஏற்றி விழா சிறப்பாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து சிவபெருமான் வீதி உலா வந்து டாக்டர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த விழா உபயத்தினை ராமலிங்கம் ஸ்டோர் உரிமையாளர் டி ஜி ராமலிங்கம் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது

