காஞ்சிபுரம் வேணுகோபாலசாமி ஆலயத்தில் உறியடி உற்சவம்
காஞ்சிபுரம் வேணுகோபாலசாமி ஆலயத்தில் உறியடி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.


காஞ்சிபுரம் ஓ பி கே புது தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ வேணுகோபால சுவாமி பஜனை ஆலயத்தில் உரியடி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதில் உற்சவர் வேணுகோபாலனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனை தொடர்ந்து opk.புது தெரு ஓ பி கே பள்ளத்தெரு, வணிகர் தெரு, பத்ரகாளி அம்மன் கோவில் தெரு, நரசிங்கராயர் தெரு உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் உரியடி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஆர்வத்துடன் கலந்து கொண்டு உறியடித்து விழாவினை சிறப்பாக கொண்டாடினர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீ வேணுகோபாலசாமி பஜனை கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


