காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் V.சோமசுந்தரம் பிறந்த நாள்: கட்சி நிர்வாகிகள் வாழ்த்து
காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் பிறந்த நாளை ஒட்டி ஏராளமான கட்சி நிர்வாகிகள் மலர்மாலைகள் பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் குடும்பத்துடன் சென்று வாழ்த்துகள் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் அவரது இல்லத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து மலர் மாலைகள் மற்றும் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எம் ஜி ஆர் மன்ற தலைவர் ஆன காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவை குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் வள்ளிநாயகம், எஸ் எஸ் ஆர் சத்யா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம், மாவட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி ஆர் மணிவண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வழக்கறிஞர் திலக்குமார், மாநகர பகுதி செயலாளர்கள் பாலாஜி, ஸ்டாலின், கோல்ட் ரவி, ஜெயராஜ், நகர நிர்வாகிகள் கோல்ட் மோகன், முன்னாள் பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் வாசு, விசுவநாதன் ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் ,களக்காட்டூர் ராஜி, அத்திவாக்கம் ரமேஷ், ஏரிவாக்கம் ரமேஷ், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சிந்தன், சாந்தி சேதுராமன், பிரேம், வேலரசு, தேவதாஸ், கல்வெட்டு சிவாஜி, சதீஷ், முன்னாள் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கோபால், ஜமுனா ராஜேந்திரன், உதய ராமலிங்கம், வெங்கடேசன், விநாயகம் உள்ளிட்ட மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


