காஞ்சிபுரம் படவேட்டம்மன் ஆலயத்தில் வரலட்சுமி பூஜை
காஞ்சிபுரம் படவேட்டம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வரலட்சுமி பூஜையில் 108 பெண்கள் பங்கேற்பு.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் உள்ள தாய் படவேட்டம்மன் ஆலயத்தில் வரலட்சுமி பூஜை விமர்சியாக நடைபெற்றது.
இதில் மூலவர் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து உற்சவர் வரலட்சுமிக்கு 108 மந்திரங்கள் ஓதப்பட்டு புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்று 108 பெண்களுக்கும் மஞ்சள் குங்குமம் ரவிக்கை புடவை வளையல் உள்ளிட்ட பல்வேறு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்த வடிவேல் ஐயா சிறப்பாக செய்திருந்தார் இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

