காஞ்சிபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டனப் பேரணி

புரட்சியாளர் #அம்பேத்கர் நினைவுநாள்-#பாபர்மசூதி இடிப்புநாள் ! விடுதலைச் சிறுத்தைகளின் தலித்-இசுலாமியர் எழுச்சிநாளான இன்று (06/12/2025) காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாநகர் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மதி.ஆதவன் தலைமையில், மதுரை- திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை தூண்டும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பலைக் கண்டித்தும் மதநல்லிணக்கத்திற்கு எதிரான தீர்ப்பினை வழங்கிய மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் கண்டனப் பேரணி நடைபெற்றது.

காஞ்சிபுரம் இரயில்வே சாலை மின்வாரிய அலுவலகம் அருகிலிருந்து புரட்சியாளர் அம்பேத்கர் சிலை வரை ஊர்வலமாக சென்று புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
மதுரை மாவட்டம்- திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை தூண்டுகின்ற சனாதன ஆர்எஸ்எஸ் கும்பலைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்பேரணியை மாவட்ட துணைச் செயலாளர் திருமாதாசன் அவர்கள் துவக்கிவைத்து பேசினார். மண்டல துணைச் செயலாளர் பருத்திகுளம் சேகர் நிறைவுசெய்து உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் கட்சியின் சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் ஸ்டான்லி, முமாக முன்னாள் மாநில துணைச் செயலாளர் அருள்நாதன், மின்வாரிய தொவிமுன்னணி மாநில பொருளாளர் தம்பிதுரை, மாமன்ற உறுப்பினர் கௌதமி திருமாதாசன், ஒன்றியக் குழு உறுப்பினர் ரேகாஸ்டான்லி, ஒன்றிய செயலாளர் இளமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
நகரச் செயலாளர் பாலாஜி வரவேற்றார். நகர பொருளாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.


