காஞ்சிபுரத்தில் ஆன்மீக குரு 85 ஆவது அவதார திருமங்கல விழா மன்ற ஆண்டு விழா

காஞ்சிபுரத்தில் ஆன்மீக குரு 85 ஆவது அவதார திருமங்கல விழா மன்ற ஆண்டு விழா

காஞ்சிபுரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆன்மீக குரு 85 ஆவது அவதார திருமங்கல விழா மன்றத்தின் 43 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சக்தி மாலை அணிவித்து விரதம் துவங்கியது.

காஞ்சிபுரம் டிகே நம்பி தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் அருள்மிகு பங்காரு அடிகளார் அவர்களின் 85 ஆவது அவதார பெருமக்கள விழா மற்றும் மன்றத்தின் 43 ஆம் ஆண்டு விழா தைப்பூச பெரு விழாவில் முன்னிட்டு சக்தி மாலை அணிவித்து சக்தி விரதம் ஆரம்பித்தல் விழா விமர்சையாக தொடங்கியது.

இதில் காலை திருக்கச்சி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில் சிறப்பு யாகசாலை பூஜை தொடங்கியது.

இதில் செயலாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் விநாயக பூபதி, பொருளாளர் லோகநாதன் மற்றும் துணைத் தலைவர் தனபால் ஆகியோர் சக்தி கொடி ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து உலக மக்கள் நன்மை கருதியும் அனைத்து ஜீவராசிகளும் நோய்நொடி இன்றே வாழ்வு தரும் வேண்டி கலசபடத்து வேண்டி வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சக்தி மாலை அணிவித்தல் விழா நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் சக்தி மாலை அணிவித்து விரதத்தை நிறுத்துவதற்கு கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் மன்றத்தின் தலைவர் எஸ் எஸ் வாசு நன்றிகளை தெரிவித்தார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *