தண்டலம் கிராமத்தில் குளத்தை புனரமைத்து, தண்ணீர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை
ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை தண்டலம் கிராமத்தில் குளத்தை புனரமைத்து, தண்ணீர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
• ஹூண்டாய் H2OPE முயற்சியின் கீழ் ரூ.1.73 கோடி செலவிடப்பட்டுள்ளது
• 21,840 சதுர மீட்டரில், நீர் கொள்ளளவு மேம்படுத்தப்பட்டுள்ளது
• மேம்படுத்தப்பட்ட நிலத்தடி நீர் மற்றும் நீர் இருப்பு 1,500க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயனளிக்கும்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF), காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், தண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தை புனரமைத்து வழங்கியது.

இதன் மூலம், நிலைத்த நீர் மேலாண்மை மற்றும், காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் உள்ள தனது நீண்டகால அக்கறையை ஹூண்டாய் வெளிப்படுத்தியுள்ளது.
ஹூண்டாயின் H2OPE திட்டத்தின் கீழ் ₹1.73 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டம், குளத்தின் சேமிப்பு திறனை 21,840 கன மீட்டராக உயர்த்தி, இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் மீள்நிரப்பு திறனை கணிசமாக வலுப்படுத்தி, மக்களுக்கான நீர் ஆதாரத்தை மேம்படுத்தும்.
புனரமைப்புப் பணிகளில் வண்டல் நீக்கம், கரைகளை பலப்படுத்துதல், மண் அரிப்பைத் தடுக்க கற்கள் மற்றும் சுவர், பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டுதல், LED விளக்குகளை நிறுவுதல் மற்றும் வசதியான நடைபாதை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். மறுசீரமைப்பைத் தாண்டி, இம்முயற்சி நீர்நிலையின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக மதிப்பை புதுப்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தும் இத்திட்டத்தின் நோக்கங்கள்:
• நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது
• வீடு மற்றும் விவசாய பயன்பாட்டிற்கான மேம்பட்ட நீர் ஆதாரம்
• நீர் தட்டுப்பாடு காலங்களில் மேம்படுத்தப்பட்ட காலநிலை மீள்தன்மை
• மக்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் அணுகக்கூடிய இடங்கள்
1,500க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் புனரமைக்கப்பட்ட இக்குளம், இப்பகுதியில் நீண்டகால நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்குப் பங்களிக்கும்.
இந்த குளம், மாண்புமிகு தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மூத்த மாவட்ட அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம மக்கள் மற்றும் திரு. கோபால கிருஷ்ணன் C S (Whole time director and Chief Manufacturing Officer & Trustee, HMIF) ஆகியோர் முன்னிலையில் கிராம பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
துவக்க விழாவில் உரையாற்றிய HMIF அறங்காவலர் திரு. கோபால கிருஷ்ணன் C S அவர்கள், “சமூக மீள்தன்மைக்கு நீர் பாதுகாப்பு அடிப்படையானது. H2OPE முயற்சியின் கீழ், ₹1.73 கோடி முதலீட்டின் மூலம், நீர்நிலைகளை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், வாழ்வாதாரங்களை வலுப்படுத்துதல், நிலத்தடி நீரை உயர்த்துவது மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”
“தண்டலம் குள புனரமைப்பு, பொறுப்பான நீர் மேலாண்மை மூலம் கூட்டு முன்னேற்றத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. ஹூண்டாயின் ‘மனிதகுலத்திற்கான முன்னேற்றம்’ என்ற உலகளாவிய தொலைநோக்குப் பார்வை, நிலையான சமூக மேம்பாட்டை நோக்கி நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் வழிநடத்துகிறது,” என்றார்.
HMIF இன் H2OPE திட்டம், ஸ்ரீபெரும்புதூர், பரணிபுதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை போன்ற பல பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளித்து, மேம்பட்ட நிலத்தடி நீர் மட்டம், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது.
Photo Caption: கோபாலகிருஷ்ணன் C.S., HMIF நிறுவனத்தின் அறங்காவலருமான இவர், மாவட்ட அதிகாரிகள் மற்றும் கிராம மக்களின் முன்னிலையில், புதுப்பிக்கப்பட்ட தண்டலம் கிராமக் குளத்தை தொழில் துறை அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. டி. எம். அன்பரசன் அவர்களிடம் ஒப்படைத்தார்.
வெளியிட்டோர்:
ஹூண்டாய் மோட்டார் இந்திய அறக்கட்டளை
H1, சிப்காட் தொழிற்பேட்டை
இருங்காட்டுக்கோட்டை
ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா
காஞ்சிபுரம் மாவட்டம்
தமிழ்நாடு – 602 117.

