ஜூன் 30-ல் திமுக மகளிர், இலக்கிய அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை!
வரும் 30 ஆம் தேதி தி.மு.க. மகளிர், இலக்கிய அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கனிமொழி எம்.பி. அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. இலக்கிய அணி – கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை – மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 30 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
காலை 9 மணிக்கு இலக்கிய அணி, காலை 11 மணிக்கு கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, பகல் 12 மணிக்கு மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், தி.மு.க. இலக்கிய அணி -கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை – மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளின் மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

