தூத்துக்குடி: பால் பொருட்கள் உற்பத்தி ஆலையில் மேம்பாட்டுப் பணிகள் : கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே அணியாபரநல்லூரில் உள்ள தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிறுவனத்தின் பால் பொருட்கள் உற்பத்தி ஆலையில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

