ஆடி அமாவாசை: கும்பகோணம் காவிரிக் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசை: கும்பகோணம் காவிரிக் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

கும்பகோணம் மகாமக குளம் மேல் கரை மற்றும் காவிரி கரைகளில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள பெரும்பாலான ஆறுகள் கடற்கரைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கும்பகோணம் காவிரிக்கரையில் அமைந்திருக்கும் டபீர் படித்துறை, பகவத் படித்துறை, அண்ணலக்ரஹாரம் அரசலாறு படித்துறை, மகாமக குள மேல்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் அவர்களது முன்னோர்களுக்கு பிடித்த காய்கறிகள் மற்றும் உணவுகளை படைத்தும், எள், நவதானியம் வைத்து யாகம் செய்தும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மேலும் பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் உடைகளை ஏழைகளுக்கு தானமாக கொடுத்து ஆடிஅமாவாசை தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு பணிகளில் அந்தந்த படித்துறைகளில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *