‘வேர் இஸ் நிகிதா?’ | சிபிஐயிடம் புகார் மனு கொடுக்கப்படும் – எச் ராஜா ஆவேசம்

‘வேர் இஸ் நிகிதா?’ | சிபிஐயிடம் புகார் மனு கொடுக்கப்படும் – எச் ராஜா ஆவேசம்

அஜித்குமார் கொலை வழக்கில் ‘வேர் இஸ் நிகிதா?’ அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என அடுக்கடுக்காக கேள்வி கேட்ட எச். ராஜா, பாஜக அணி சார்பில் இந்த வழக்கு குறித்து சிபிஐயிடம் புகார் மனு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பெரியவர் ராமதாஸ் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் மிகப்பெரிய மரியாதை உள்ளது. எனவே ராமதாசும், அன்புமணி இருவரும் இணைந்திருந்தால் கண்ணிற்கு அழகாக இருக்கும்.

அஜித்குமார் கொலை வழக்கில் ‘வேர் இஸ் நிகிதா?’ அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என அடுக்கடுக்காக கேள்வி கேட்ட எச். ராஜா, நிகிதாவையும், மாவட்ட எஸ்பியாக இருந்த ஆஷிஷ் ராவத்தையும் கைது செய்து அவர்களிடமிருந்து விசாரணையை தொடங்க வேண்டும். இந்த விவகாரத்தில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிக்கும், இங்கிருந்து மாற்றலாகி டெல்லி சென்ற ஐஏஎஸ் அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் சிபிஐயிடம் புகார் மனு கொடுக்கப்படும் என்றார்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *