சூரிய கதிர்கள் மூலவரைத் தொட்ட அதிசயம் – கும்பகோணம் நாகேஸ்வரன் ஆலயத்தில் சூரிய பூஜை
சூரிய கதிர்கள் மூலவரைத் தொட்ட அதிசயம்!
கும்பகோணம் நாகேஸ்வரன் ஆலயத்தில் சூரிய பூஜை!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரன் ஆலயம் அமைந்துள்ள, சுமார் 1500 ஆண்டுகள் பழமையான திருத்தலத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைபெற்றது.
திருநாவுக்கரசர் தேவாரப் பதிகம் பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களில் சூரிய பூஜை நடைபெறுவது வழக்கம்.
இந்த நாட்களில் சூரியனின் கதிர்கள் நேராக மூலவர் மீது படருவது இந்நிகழ்வின் தனிச்சிறப்பாகும்.
இன்று நடைபெற்ற பூஜையின் போது, சூரிய ஒளி மூலவரைத் தொட்ட தருணத்தில் தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த அரிய தரிசனத்தை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் தனிச் சன்னதி கொண்டுள்ள சூரிய பகவானுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
