எல்லா சமுதாயத்துக்கும் எல்லா மதத்திற்கும் அப்பாற்பட்டவர் காமராஜர் – செல்லூர் ராஜு

எல்லா சமுதாயத்துக்கும் எல்லா மதத்திற்கும் அப்பாற்பட்டவர் காமராஜர் – செல்லூர் ராஜு

கல்வி செல்வம் தான் அழியாச் செல்வம் என்ற அடிப்படையில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் காமராஜரின் 123 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், அமைப்புகளும் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ தி மு க சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் கட்சித தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, “காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் விழாவில் கலந்து கொண்டதில் கட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்”.

“எங்கள் கழகத்தின் புரட்சி தலைவர், புரட்சி தலைவி அம்மா அவர்கள் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்படியார் பழனிச்சாமி அவர்கள் அந்த சமுதாயத்தை சமுதாயத்திற்கும் மிகப் பெரிய பங்காற்றியவர்கள். காமராஜர் அவர்கள் புகழுக்கு புகழ் சேர்த்தவர்கள்‌”.

“என்றைக்கும் வணிகப் பெருமக்கள் தான் எங்களுடைய ஆட்சியில் சிறப்பாக வணிகம் செய்யப்பட்டு வருகிறது. ரவுடிகளே இல்லை என்று அம்மா அவர்கள் உருவாக்கினார்கள். எங்கள் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியிலும் சீரும் சிறப்புமாக ஆட்சி அமைந்தது”.

“எங்கள் ஆட்சியில் அனைவருக்கும் பதவி கிடைக்கும். இந்த கட்சியில் மாவட்ட துணைச் செயலாளரே சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். நீண்ட நாள் பொருளாளராக இருந்து மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து உள்ளார். பெருந்தலைவர் காமராஜர் எல்லா சமுதாயத்துக்கும் எல்லா மதத்திற்கும் அப்பாற்பட்டவர்”.

“நாட்டில் படிக்கணும், கல்வி செல்வம் தான் அழியாச் செல்வம் என்ற அடிப்படையில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதன் வழியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்கள்”.

“அது மட்டுமல்ல புரட்சி தலைவி அம்மா அவர்கள் தமிழகம் முழுவதும் விலையில்லா அரிசி திட்டத்தை கொண்டு வந்தார்கள். எங்கள் எம்ஜிஆர் ஆட்சி புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா காலம் முதல் எடப்பாடி பழனிச்சாமி வரை கல்விக்கு சிறந்து ஆட்சி அமைத்தவர்கள்” என்றார்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *