மதுரை தத்தனேரி மயான ஊழியர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள்: மதுரை அட்சய பாத்திரம் ட்ரஸ்ட்க்கு குவியும் பாராட்டுகள்!
மதுரை தத்தனேரி மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மதுரையின் அட்சயப் பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதை ஒட்டி மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பொதுவாக ஏழை எளியவர்கள் மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை அற்ற மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகளை பொதுநல அமைப்புகள் வழங்குவது வழக்கம்.
சற்று மாறாக மதுரை தத்தனேரி மயானத்தில் வைத்து மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மற்றும் அணுஷத்தின் அனுகிரகம் அமைப்பின் சார்பில் சுடுகாட்டில் உடல்களை எரிக்கும், புதைக்கும் மயான பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தத்தனேரி மயானத்தில் நடைபெற்றது.
மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது, குழி தோண்டுவது, உடல்களை எரிப்பது மற்றும் மயானத்தை பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்து வரும் மயான ஊழியர்கள் உதவியாளர்கள் உள்ளிட்ட 25 பேருக்கு மதுரையில் கடந்த ஐந்து வருடங்களாக ரோட்டோரத்தில் உள்ள வரியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 300 பேருக்கு மதிய உணவினை வழங்கி வரும் மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, வேஷ்டி -சேலை மற்றும் அரிசி நல திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்வில் சமூக ஆர்வலர் இலஅமுதன், மயான பதிவாளர்கள் (பொறுப்பு) வெங்கடேஸ்வரன் பாபு உட்பட பலர் பங்கேற்றார்
உதவிகள் வழங்கிய தன்னார்வலர்களுக்கு மயான ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர். உதவிகளை வழங்கிய மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

