கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனாரின் பிறந்த நாள்: மதுரையில் கொண்டாட்டம்
கப்பலோட்டிய தமிழர் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனாரின் 154 ஆவது பிறந்த நாள் விழா, இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி மூர்த்தி தலைமையில் திருப்பாலை பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட வ உ சிதம்பரனாரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக கட்சி நிர்வாகிகள், வ உ சி சமுதாய அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

