போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை நான் சந்தித்தது அரசியலில் நான் செய்த தவறு; வைகோ ஆவேசம்!
போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை நான் சந்திதது அரசியலில் நான் செய்த தவறு என வருத்தம் தெரிவித்த வைகோ, “திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கும், திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்!, இது என் கட்டளை!” என ஆவேசமாக பேசியுள்ளார்.

மதிமுக வின் சென்னை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட இருவருக்கும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன் ‘செங்கோல்’, ‘வீரவாள்’ மற்றும் மாநாட்டிற்கு நிதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வைகோ மேடையில் பேசிக்கொண்டிருந்த போது தொண்டர் ஒருவர் இடையில் பேசியதால் அவரை கோபத்துடன் வெளியே போக சொன்னதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய வைகோ “நம்மை குறிவைத்து தாக்குவதாகவும், நமது இயக்கம் இருக்க கூடாது என பலரும் திட்டம் திட்டினாலும் நாம் தலை துவண்டு விடக்கூடாது என்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்து வந்து உள்ளதாகும், மதிமுக காணாமல் போய்விட்டது, கரைந்து போய்விட்டது, வைகோ அரசியல் முடிந்து விட்டது என ஊடகங்களில் செய்தி போடுகிறார்கள்”.
“நேற்று முன் தினம் நடந்த கூட்டத்தில் 15 நிமிடம் மின்சாரம் வரவில்லை நான்கு மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் காற்றுக்காக உள்ளே இருந்தவர்கள் வெளியே போனார்கள். அப்போது காலியான நாற்காலிகளை பார்த்து பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தார்கள். நான் பத்திரிகையாளர்களுக்கு விரோதி அல்ல
பத்திரிகை சுதந்திரத்திற்காக நான் பாடுபட்டவன்”.

“அரங்கம் நிறைந்த போது ஏன் புகைப்படம் எடுக்கவில்லை எனவே அரங்கத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என கூறினேன். உடனடியாக பத்திரிகையாளர்களிடம் தொண்டர்கள் வாக்குவாதம் செய்தார்கள். மல்லை சத்யா எதிரிகள், துரோகிகளோடு நமது கட்சி அழிக்க வேண்டும் என வெளியே போனவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார். இங்கிருந்து ஒரு கூட்டத்தை அழைத்து கொண்டு போகலாம் என திட்டமிட்டிருக்கிறார்”.
“மாமல்லபுரத்தில் படகில் சென்ற போது கடலில் படகு கவிழந்தபோது உடன் வந்த நண்பர் சத்தியா தோளை பற்றிக் கொண்டேன் என உயிரை காப்பாற்றினாய் என்று நான் சொன்னேன் அப்படி சொன்னது உண்மை, மூன்று முறை காப்பாற்றியதாக மல்லை சத்யா கூறிய நிலையில் மற்ற இரண்டு இடங்கள் எங்கே, மல்லை சத்யா இரண்டு ஆண்டுகளில் ஏழு முறை வெளிநாடு சென்றுள்ளார்”.
“இதுவரை எனக்கு தகவல் சொல்லவில்லை, என்னை சந்திக்கவும் இல்லை மதிமுக கட்சியில் இருக்கிறேன் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கிறேன் என பதிவு செய்யவில்லை, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது மதிமுக அதை தடுத்து நிறுத்தியவர் பெயர்தான் வைகோ!”.
“போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தது தான் நான் அரசியலில் செய்த தவறு!. திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கும், திமுக வெற்றிக்கு பாடுபடுவோம், இது என் கட்டளை!” என பேசினார்.

