மீஞ்சூரில் ஸ்ரீ சங்கரலிங்க சித்தருக்கு குருபூஜை விழா
மீஞ்சூரில் ஸ்ரீ சங்கரலிங்க சித்தருக்கு 28 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி ஜேஜே நகர் பகுதியில் ஓம் ஸ்ரீ சங்கரலிங்காயர் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அபய அஸ்த வரத ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீ சங்கரலிங்க சித்தருக்கு 28 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
சிவ.பொன்னையா சித்தர் தலைமையில் நடைபெற்ற குருபூஜையில் ஸ்ரீ சங்கரலிங்க சித்தருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இணைய சித்தர் சிவ பொன்னையா சித்தருக்கு நீடூடி வாழ வேண்டி கணபதி ஓமம், நான்கு காலயாக பூஜைகள், சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டு ஆலயத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகளும், திருக்கோவிலில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடத்தப்பட்டு ஆஞ்சநேயர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சிவ பொன்னையா சித்தருக்கு மலர் மாலை அணிவித்து பக்தர்கள் கௌரவப்படுத்தினர்.
மேலும் சித்தரின் அருளாசைகளை பெற்றிட வருகை புரிந்த பக்தர்களுக்கு வேட்டி, புடவைகளும், மற்றும் அன்னதானமும் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

