பொன்னேரியில் காமராஜர் வெண்கல திருவுருவ சிலைக்கு பாலபிஷேகம்
பொன்னேரியில் கர்மவீரர் காமராஜர் வெண்கல திருவுருவ சிலைக்கு பாலபிஷேகம் செய்து பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 123 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொன்னேரியில் கர்மவீரர் காமராஜர் நாடார் இளைஞர்கள் நற்பணி மன்றம் பொன்னேரி வட்டார நாடார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அப்போது அவர்கள், பட்டாசு வெடித்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க, பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகளில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
பின்னர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி காமராஜரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


