பெரும்பேடு அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
பொன்னேரியை அடுத்துள்ள பெரும்பேடு அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில், பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பெரும்பேடு கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேகத்திற்கான கணபதி பூஜை கடந்த 13ஆம் தேதி தொடங்கியது தொடர்ச்சியாக கடந்த நான்கு தினங்களாக யாக கலச பூஜைகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நிறைவு நாளான இன்று சிவ ஆச்சாரியார்கள் முக்கிய புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித திருத்தத்தைக் கொண்டு அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி கருவறை கோபுரம், விநாயகர், சிவன் சன்னதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் தனி சன்னதிக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடத்தினர்.
அப்போது கூடியிருந்த பெருந்திரளான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா”முருகனுக்கு அரோகரா”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”என பக்தி பரவசத்துடன் எழுப்பியப்பம் கோஷம் விண்ணை ஏட்டியது. தொடர்ந்து முத்துக்குமார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனைகளும் நடைபெற்றன. கோவில் நிர்வாகம் சார்பில் விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

