ராமநாதபுரம் பள்ளிக்கு 2024-25 சிறந்த பள்ளிகளுக்கான கேடயம்

2024-25 சிறந்த பள்ளிக்கான கேடயம் வழங்கும் நிகழ்வு காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியில், நடைபெற்றது.
துணை முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர் கலந்துகொண்டு மாவட்ட வாரியாக கேடயங்களை வழங்கினர்.
அதில் இராமநாதபுரம் பேராவூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கான கேடயத்தை தலைமை ஆசிரியை காளீஸ்வரி பெற்றுக்கொண்டார்.

