திருவாடானை சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராம. கருமாணிக்கம் வேட்பு மனு தாக்கல்
சட்டமன்ற தேர்தலில் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் இராம. கருமாணிக்கம் இன்று (06.04.2026) திங்கள்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ரமேஷ் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதில் ராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளர், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன், கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
முன்னதாக அதிமுகவினரும் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றதால் சாலைமுழுவதும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கருமாணிக்கம் கால்நடையாக வெகுதூரம் நடந்தே சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராம கருமாணிக்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்டங்களால் கண்டிப்பாக வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், அந்த நலத்திட்டங்களை கூறியே வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

