முன்னாள் ராணுவத்தினர் நல சங்க புதிய கட்டிட 2ம் ஆண்டு விழா
 
					ராமநாதபுரம் மாவட்டம் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கத்தின் புதிய கட்டிட இரண்டாம் ஆண்டு துவக்க விழாக் கூட்டம் தலைவர் ஹைதர் அலி தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சங்க செயலாளர் தர்மலிங்கம், சங்க செய்தித் தொடர்பாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் பூமிநாதன், கட்டிட அமைப்பாளர் முருகானந்தம், நாகராஜ், பிச்சை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பலர் கலந்துகொண்டு சங்கத்தின் முன்னாள் ராணுவத்தினர் சங்க கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டு நன்றி செலுத்தப்பட்டது.


 
			 
			 
			 
			 
			