ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின கொடி ஏற்றி மரியாதை

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின கொடி ஏற்றி மரியாதை

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் 79 ஆவது சுதந்திர தின கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் சாரண சாரணியர், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை உள்ளிட்டவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார், வெண்புறாக்களை வானில் பறக்க விட்டு மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டு மகிழ்ச்சியடைய செய்தார்.

தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தியபின்பு சிறப்பாகப் பணிபுரிந்த அரசு அலுவலர்களைப் பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதையடுத்து மொத்தம் 80 பயனாளிகளுக்கு 84 லட்சத்து 29 ஆயிரத்து 154 ரூபாய் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *