பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்: ராமநாதபுரம் காங்கிரசார் கல்வி உபகரணங்கள், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
பெருந்தலைவர் காமராஜர் 123 ஆவது பிறந்த நாள், ராமநாதபுரம் காங்கிரசார் கல்வி உபகரணங்கள், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் 123 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மத்திய கொடிக்கம்பம் அருகே ராமநாதபுரம் மாவட்ட, நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அப்போது, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினரும், மாவட்ட பொருளாளருமான நகர் மன்ற உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் முன்னிலையில் நகர் தலைவர் கோபி ஏற்பாட்டில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.

பின்னர் ஏராளமான பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
இதில் முன்னாள் மகளிர் அணி மாவட்ட தலைவி ராமலட்சுமி, வட்டார தலைவர்கள் காருகுடிசேகர், சேதுபாண்டியன், மாவட்டக் கலை பிரிவு தலைவர் வலம்புரி, துணைத் தலைவர்கள் காமராஜ், ஆறுமுகம், நகர் துணை தலைவர் ஜெயகுமார், மாவட்ட மனித உரிமை பிரிவு தலைவர் பசும்பொன் அபுதாஹிர், காங்கிரஸ் நிர்வாகிகள் பாஸ்கரசேதுபதி, அழகர், பாபு உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

