பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தமிழக அரசு: ராமநாதபுரம் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தமிழக அரசு: ராமநாதபுரம் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் அருள்ராஜ் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் வழக்கு பதிவு செய்து இதுவரை ஆசிரியர் கைது செய்யப்படவில்லை. அதேபோல் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தமிழக அரசை கண்டித்து பரமக்குடியில் பாஜக சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக மாநில நிர்வாகி பொன்பாலகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *