ராமநாதபுரத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர்: பொதுமக்கள் அவதி.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் ஊராட்சி 6வது வடக்குத்தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் அனைத்து சாலைகள் முழுவதும் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த 10 நாட்களாக இந்த நிலை நீடித்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வசந்த நகர், ஓம் சக்தி நகர் பிரதான சாலைக்கு வர இயலாத நிலை உள்ளது. மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பகுதிக்கு வர மறுக்கிறார்கள்.
எனவே பொதுமக்கள் அதிகமான இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். போர்க்கால அடிப்படையில் இதனை விரைவில் சரிசெய்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிண்றனர்.

