ராமநாதபுரத்தில் 77வது குடியரசு தின விழா: மாவட்ட ஆட்சியர் கொடியை ஏற்றி வைத்து மரியாதை

ராமநாதபுரத்தில் 77வது குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 136 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ராமநாதபுரத்தில் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியை ஏற்றி, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, சமாதான வெண் புறாக்களை பறக்க விட்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து, பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.

தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு ரூபாய் 136 பயனாளிகளுக்கு 83 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இவ்விழாவில், காவல் துறை துணை தலைவர் தேஷ்முக் சேகர் சஞ்சய் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன், கூடுதல் ஆட்சியர் திவ்யா ஷூ நிகம் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

