ராமநாதபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் SIR ஐ திரும்ப பெற வலியுறுத்தி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ், இந்தியயூனியன் முஸ்லீம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றகழகம், எஸ்.டி. பி.ஐ, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முற்போக்கு கூட்டணி கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, காங்கிரஸ் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுந்தர்ராஜன், அன்வர்ராஜா, ராமநாதபுரம் காங்கிரஸ் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜாராம் பாண்டியன், ஜோதிபாலன், மகிளா காங்கிரஸ் ராமலட்சுமி, காங்கிரஸ் நகர் தலைவர் கோபி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் ஓபிசி அணி தலைவர் டாக்டர் ஜெயகுமார், திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் இன்பா.ரகு, திமுக மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே. பிரவீன், ராமநாதபுரம் நகராட்சி தலைவர் ஆர்.கே கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் கூட்டணி கட்சி மாநில, மாவட்ட ஒன்றிய நகர் நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

