முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் R.S.ராஜகண்ணப்பன் வேட்பு மனு தாக்கல்

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் R.S.ராஜகண்ணப்பன் வேட்பு மனு தாக்கல்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வனத்துறை அமைச்சர் R.S.ராஜகண்ணப்பன் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் நிலையில் திமுக கூட்டணி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அந்தந்த தொகுதியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வனத்துறை அமைச்சர் R.S. ராஜகண்ணப்பன் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கங்கா தேவியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதில், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முருகவேல், தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை சின்னா, காங்கிரஸ் கட்சி நிர்வாகி சரவண காந்தி உடனிருந்தனர்.

இதனை தொடந்து வேட்பாளர் R.S.ராஜகண்ணப்பனுக்கு கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *