ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு

ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு

ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு.

ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பில் பட்டணம் காத்தான் இ சி ஆர் சாலையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது,

அகமுடையார் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாம்பன் ராஜாஜி தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் விஜயராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார், இணைச்செயலாளர் பி ஆர் பாபு, துணைத் தலைவர் கே.வி ரமேஷ், பொருளாளர் பாஸ்கர சேதுபதி, ராமநாதபுரம் அகமுடையார் சட்டமன்றத் தொகுதி தலைவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் இன மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கமுதி கடலாடி முதுகுளத்தூர் பரமக்குடி நயினார் கோவில் திருவாடனை ராமேஸ்வரம் மண்டபம் வழுதூர் வாலாந்தரவை தெற்கு காட்டூர் உடைச்சியார் வலசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் முன்னேற்ற சங்கம் சார்பில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

அதில்
01. அகமுடையார் சமுதாயத்திற்கு கல்வி வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கும் விதத்தில் மத்திய மாநில அரசுகள் சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும்

02. ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிக பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அகமுடையார் சமுதாய வேட்பாளர்களை அரசியல் கட்சியினர் நிறுத்த வேண்டும் அப்படி செய்தால் அனைத்து அகமுடையார்களும் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்

03. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலையை ராமநாதபுரத்தில் நிறுவ வேண்டும்

04. மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் விடுபட்ட வாரிசுதாரர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்

05. தமிழகம் முழுவதும் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் பட்டங்களை துறந்து அகமுடையார் சமுதாயம் என்ற ஜாதிப் பெயரை அரசு ஆவணங்களில் சேர்க்க வேண்டும்

ஆகிய ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *