“திறந்திடு திறந்திடு, ஸ்டெர்லைட் ஆலையை திறந்திடு”; ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

“திறந்திடு திறந்திடு, ஸ்டெர்லைட் ஆலையை திறந்திடு”; ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கும் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம் என்ற கோஷத்துடன் தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

தூத்துக்குடியில் சிறப்பாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வீண் வதந்தியின் காரணமாக ஏற்பட்ட போராட்டத்தால் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.

இந்த ஆலை மூடப்பட்டதால் பல ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர் என்று கூறி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி அரசிடம் முறையிட்டு வருகின்றனர்.

மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் தற்போது பத்மபூஷண் விருதாளர் சுற்றுச்சூழல் பேராசிரியர் அறிக்கையை சுட்டிக்காட்டி பசுமை முறையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பல்வேறு தொழில் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் மனு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை பசுமை முறையில் மீண்டும் துவக்குவதற்கான
பசுமை காப்பர் உற்பத்தி திட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கத்தினர், மாவட்ட லாரி உரிமையாளர்கள் நலச் சங்கம், ஸ்டெர்லைட் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்கள் சங்கம், மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள், ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்பினர் பொதுமக்கள் ஏற்கனவே பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இன்று ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், மீனவ கிராம மக்கள், சுய உதவி குழு பெண்கள் ஆட்டோ தொழிலாளர்கள், பி எம் டி பசும்பொன் முத்துராமன் இயக்கத்தினர் என பல தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.பாளையங்கோட்டை சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக

நூலை வாயில் முன்பு அனைவரும் ஒன்று கூடினர். அப்போது அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வேலை கொடு என்பது போன்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் அமைப்புக்கு தங்களது வாக்கு உண்டு என்றும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் கட்சிக்கு வாக்களிப்போம் என்றும் உறுதி அளித்தனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *