தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல்! – ஏப்ரல் 4-ல் வாக்கு எண்ணிக்கை
தமிழ்நாடு சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசின் பதவிக்காலம் மே பத்தாம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதேபோல், புதுச்சேரியில் ஜூன் 15 ஆம் தேதியுடனும், மேற்கு வங்கத்தில் மே ஏழாம் தேதியுடனும், கேரளத்தில் மே 23 ஆம் தேதியுடனும் மாநிலங்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் உட்பட 5 மாநிலங்களிலும் மொத்தம் 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த நிலையில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இன்று (15.03.2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
இதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்பட உள்ளன.
- வேட்புமனுத் தாக்கல் – மார்ச் 30
- வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் – ஏப்ரல் 6
- வேட்புமனு பரிசீலனை – ஏப்ரல் 7
- வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் – ஏப்ரல் 9
- வாக்குப் பதிவு நாள் – ஏப்ரல் 23
- வாக்கு எண்ணிக்கை – மே 4
இதேபோல், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

