தஞ்சாவூர் பெரியகோவில் பெருநந்திக்கு 12 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர் பெரியகோவில் பெருநந்திக்கு 12 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெரு நந்திக்கு பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும்.

இதேபோல் ஆனி மாத பிரதோஷமான இன்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நந்தியம்பெருமானுக்கு மகாதீபாராதணை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *