காளி புறப்பாடு – தஞ்சாவூர் கீழவாசல் திரௌபதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
தஞ்சாவூர் கீழவாசலில் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக காளி புறப்பாடு நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்து அடைந்தது.
மிகவும் தொன்மையான இந்த ஆலயத்தில் மகாபாரத உபன்னியாசம் நடைபெற்று மக்களுக்கு மகாபாரதம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை தெருவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

