தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்!
நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதிய சங்கத்தின் பன்னிரெண்டாவது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் ஐநூறுக்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.

நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும், 2025 ஆம் ஆண்டிற்கான கருணை அடிப்படையிலான பணி நியமன உத்தரவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தியும், இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் பணிக்கு பணி நியமன உத்தரவு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

