திருச்செந்தூர் அருகே புன்னைக்காயலில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் கனிமொழிMP

திருச்செந்தூர் அருகே புன்னைக்காயலில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் கனிமொழிMP

திருச்செந்தூர் அருகே புன்னைக்காயலில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி. திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று (03/09/2025) திறந்து வைத்தார்.

பின்னர், அங்கன்வாடியில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புகளை கனிமொழி கருணாநிதி எம்.பி. வழங்கினார்.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *