ஏமாறாதே! திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!!
இவரது பெயர் ஆனந்த் குமார் ராமசாமி.
துபாய் போலி பையிங் ஆபீஸ் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆர்டர் கொடுத்து பின்பு அதை எடுக்காமல் வேறொரு புரோக்கர் மூலம் பாதி விலைக்கு வாங்குகிறார் என அவர்மீது புகார் கூறப்படுகிறது.
சிலபேரிடம் 30நாளில் பணம் தருவதாக சொல்லி துபாய் வரை கூட்ஸ் வரவைத்து பணம் தராமல் ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
இதுவரை திருப்பூரில் மட்டும் சுமார் ரூ.5 கோடி வரை ஏமாற்றி உள்ள இந்த ஆனந்த்குமார், அதில் வரும் பணத்தில் திருப்பூர் வெளிங்காடு பகுதில் பல அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வாடகைக்கு விட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
வருடத்திற்கு ஒருமுறை திருப்பூர் வந்து தனது குடும்பத்தை பார்த்துவிட்டு சென்றுவிடும் அவரது மனைவியிடம் விசாரித்தல், “நாங்கள் விவகாரத்து செய்யப்போகிறோம்” என்று கதை கூறுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே, ‘திருப்பூர் பனியன் உரிமையாளர்கள் எச்சரிகையாக இருக்கவேண்டும்’ என்று இந்த பதிவின் மூலம் கேட்டுக்கொள்வதாக திருப்பூர் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

