பழவேற்காடு பகுதியில் மீன்பிடி படகுகள் செல்ல தடை உத்தரவு

பழவேற்காடு பகுதியில் மீன்பிடி படகுகள் செல்ல தடை உத்தரவு

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வகத்தில் இருந்து GSLV F16 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு பகுதி மீன்பிடி படகுகள் கடலுக்குச் செல்ல தமிழக அரசு தற்காலிகமாக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வகத்தில் இருந்து வருகின்ற 30.7.2025 அன்று GSLV F16 ( Nisarsaiellite) விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பழவேற்காடு, ஏலாவூர், சுண்ணாம்புகுளம், ஆரம்பாக்கம் ஆகிய பகுதியில் உள்ள மீனவ கிராமங்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில் வருகின்ற 30 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வகத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளதால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாரும் அன்றைய தினம் பாதுகாப்பு கருதி மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சசிகலா, தடையை மீறி கடலுக்கு செல்லும் படகுகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *