தமிழ் கொரஞ்சூர் கிராமத்தில் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா

தமிழ் கொரஞ்சூர் கிராமத்தில் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த தமிழ் கொரஞ்சூர் கிராமத்தில் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கணபதி ஹோமம் அதனைத் தொடர்ந்து பால்குடம் அம்மனுக்கு அபிஷேகம் கூழ் ஊற்றுதல் தட்டு வரிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் ஊர் எல்லையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கரகம், அக்னி சட்டி என அம்மன் வீதி உலாவுடன் நடந்து வந்து தீக்குளியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதனைக்காண்பதற்கு மீஞ்சூர், கொரஞ்சூர், ரெட்டியாபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து நிகழ்த்தப்பட்ட வானவேடிக்கையையும் பக்தர்கள் கண்டுகளித்து சென்றனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *