முதல்நாளில் முறையான சம்பவம்! – மாணவ மாணவிகளை தரையில் அமர வைத்த கல்லூரி நிர்வாகம்!
கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கிய இன்றைய முதல்நாளே மாணவர்களை தரையில் அமர வைத்த அவலம் செங்கம் பகுதியில் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் கல்லூரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று இன்று முதல் நாள் வகுப்பு தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் ஐந்து பாடப்பிரிவுகளின் சுமார் 160 மாணவர்கள், முதல் நாள் கல்லூரிக்கு வருகை புரிந்தனர்.

வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில இருக்கைகள் இல்லாததால் தரையில் அமர வைத்தும், மற்றொரு அறையில் உள்ள இருக்கைகளை கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை எடுத்து வர கூறி அமர வைத்தனர்.
இந்த அவல நிலையை கண்டு முதல் நாள் கல்லூரிக்கு தனது பிள்ளைகள் கல்வி கற்க செல்வதை காண வந்த சில பெற்றோர்கள் மாணவர்களே இருக்கைகளை எடுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பணிகளை முழுமையாக முடிக்காமல் வகுப்புகள் தொடங்கப்பட்டதால் மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை அடைந்து வருகின்றனர்.

