உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைய இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைய இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைய இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 17-ம் தேதி வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாள். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 (தமிழ்நாடு சட்டம்.9/1999) தமிழ்நாடு சட்டம் 30/2025-ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37(1) (1-a) ன் மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி / நகராட்சி / மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு https://chennalcorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி/நகராட்சி மன்றத்திற்கு https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்றத்திற்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் 1/07/2025 முதல் 17/07/2025 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பேரூராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி/மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி/ மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் 17/07/2025 அன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *